பஸ் மோதி பெயிண்டர் பலி

நவம்மால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு பெயிண்டர்.பஸ் எதிர்பாராதவிதமாக செல்வராசு மீது மோதியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி பகுதியான வடமங்கலம் முருகன் கோவில் அருகே இன்று அதிகாலை நவம்மால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு பெயிண்டர்.

இவர் அப்பகுதியில் இன்று காலை சாலையைக் கடந்த போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக செல்வராசு மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராசு தலை உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com