பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கோமதி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார்.

முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்து வந்தது.

இந்த நோய் காரணமாக கடந்த சில நாட்களாக முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் கொடுமையால் முருகன் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கோமதி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.

முருகன் மனைவிக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com