மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மூலக்குளம் ெஜ.ஜெ. நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 65). இவருக்கும் இவரது வீட்டின் எதிரில் வசிக்கும் பிரேம்தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து செல்லும் வயல்வெளியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.

சம்பவத்தன்று தமிழ்செ ல்வியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஸ்வின் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரெட்டியா ர்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com