முதியவர் தூக்கிட்டு தற்கொலை

மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பலராமன் (வயது64). இவருக்கு செல்வி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகன் மற்றும் வள்ளி மற்றும் துர்கா ஆகிய மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது இளையமகள் துர்கா வீட்டுக்கு சென்றிருந்தார். பலராமன் தனது மனைவி செல்வியை வீட்டுக்கு அழைத்து வருமாறு மகனிடம் கூறி வந்தார்.

அதற்கு மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் இதனை பலராமன் ஏற்காமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டு வராண்டாவில் பலராமன் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.வெளியில் சென்றிருந்த மணிகண்டன் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பலராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com