காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலி

காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது.
காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலி
Published on

புதுச்சேரி:

காரைக்கால் கோட்டு ச்சேரியை அடுத்த வரி ச்சி க்குடி பகுதியை ச்சே ர்ந்த வர் காத்தமுத்து(வயது60). இவர் கடந்த ஏப்ரல் 13-ந் தேதிவரிச்சிச்குடி பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மெயின் சாலையையை ஒட்டி உள்ள ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது. இதில், காத்தமுத்து தலையில் பலத்த காயமடைந்தார்.உடனே அங்கிருந்தவர்கள், காத்தமுத்துவை, வரிச்சிச்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள், புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சிகிச்சையில் இருந்த காத்தமுத்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது உறவினர் கோவி ந்தசாமி, காரைக்கால் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com