ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்

ஓம்சக்தி சேகர் அழைப்பு மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தீய சக்தியிடம் இருந்து தொண்டர்களை காக்க எம்.ஜி.ஆரால் உருவான இயக்கமான அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வரலாம் என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தொண்டர்களின் இரும்பு கோட்டையாக்கினார்.

ஜெயலலிதா எண்ணங்களை அறவே நீக்கி அ.தி.மு.க. வை அபகரிக்க முயற்சிக்கும் சுயநல கூட்டத்திடம் இருந்து காத்து மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்ற ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், முதல் -அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு நாயகர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நிரூபிக்க திருச்சியில் மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.

அ.தி.மு.க ஆண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவை தொண்டர்களால் சிறப்பாக நடத்திட திருச்சியில் ஒன்று கூட அனை வரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று லட்சக்க ணக்கான ஜெயலலிதா தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து மலைக்கோட்டை மாநகரில் கூட உள்ளனர்.

புதுவை மாநில ஜெயலலிதாவின் உண்மை யான தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு திருச்சி மாநகர் நோக்கி புறப்படுவோம் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம். என்று அனைவரையும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com