டிரைவர்களுக்கு மூக்கு கண்ணாடி-சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்

பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்.தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார்.
டிரைவர்களுக்கு சிவா எம்.எல்.ஏ. மூக்கு கண்ணாடி வழங்கிய காட்சி.
டிரைவர்களுக்கு சிவா எம்.எல்.ஏ. மூக்கு கண்ணாடி வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி, முதல் -அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாளையொட்டி ஆட்டோ, டெம்போ மற்றும் பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்..

இதன் தொடர்ச்சியாக கண் பரிசோதித்து கொண்ட பயனாளிகளுக்குமூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா இல்லத்தில் நடைபெற்றது. தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். விழாவில், எதிர்கட்சி தலைவர் சிவா பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொ.மு.ச. செயலாளர் அண்ணா அடைக்கலம், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், கிளை செயலாளர்கள் ஐசக், சசி, விஜயகுமார், அகிலன், முத்து, ராஜி, தாமரை, சொல்தா ரவி, தட்சணாமூர்த்தி, புருஷோத்தமன், ஸ்ரீதர், மூர்த்தி, சேட்டு, பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com