குறைந்த மின் அழுத்தத்தை போக்க புதிய மின் மாற்றி

நேரு எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.
நேரு எம்.எல்.ஏ.  புதிய மின்மாற்றியின் செயல்பாடுகளை தொடங்கி வைத்த காட்சி.
நேரு எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றியின் செயல்பாடுகளை தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

உருளையன்பேட்டை செங்கேணி அம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது

அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கேணியம்மன் நகர், ஜே.வி.எஸ் வீதி, சுதேசிமில் வளாகத்தில் உள்ள 2 அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி மின்துறை மூலம் ரூ.15 லட்சம் செலவில் நடந்தது.

புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.

இதனையடுத்து மின்மாற்றியினை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  நடந்தது. நேரு எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றியின் செயல்பாடு களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com