புதிய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுவை புதிய பஸ் நிலையம் மோடி ஆட்டோ ஸ்டேண்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார்.
புதிய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம்  நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி. அருகில் பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் உள்ளார்.
புதிய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி. அருகில் பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் உள்ளார்.
Published on

புதுச்சேரி:

புதுவை புதிய பஸ் நிலையம் மோடி ஆட்டோ ஸ்டேண்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான பிரபுதாஸ் ஏற்பாட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார். இதேபோல் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயணன், பா.ஜனதா பிரமுகர்கள் சாம்ராஜ், அந்துவான்பிரபு, சக்திவேல் கீதா, லட்சுமி, அப்பு, மோடி ஆட்டோ ஸ்டேண்ட் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com