தேசிய பத்திரிகையாளர் தினம் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்துசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்க சாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயக மாண்புகளைக் கட்டிக்காப்பதில் பத்திரிகை மற்றும் ஊட கங்களின் பங்கு அளப்பரியது. பத்திரிகையாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள்.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது, பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்கும் பத்திரிகைத்துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி நல்வாழ்த்துகனைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com