ஆரோவில்லில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி 18-ந் தேதி தொடங்குகிறது

போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது.
ஆரோவில்லில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி 18-ந் தேதி தொடங்குகிறது
Published on

புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ரெட்எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

இந்த பள்ளியும், புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டிகள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. காலை 7 முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை, ஆரோவில்லை சேர்ந்த தலை சிறந்த 40 வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.

டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. முதலிடம் பெறுபவருக்கு தேசிய சாம்பியன்ஷிப் பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா வருகிற ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என குதிரையேற்ற பயிற்சி பள்ளி நிறுவனர் ஜாக்லீன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com