இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர் நாராயணசாமி-பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தாக்கு

முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

புதுவை மாநிலத்தை காக்கும் சக்தி காங்கிரஸ் கட்சி என்கிறார். 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து புதுவையை அழித்த கட்சி காங்கிரஸ். தனி கணக்கு ஆரம்பித்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி புதுவை மாநிலத்தை அழிவு பாதைக்கு எடுத்துச்சென்றது.

பல ஆண்டுகளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை

கேள்விக்குறியாக்கிய பெருமை நாராயணசாமி யைத்தான் சேரும்.

9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.

உலக நாடுகளின் பொருளாதார நிலையில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. எனவே நாராயணசாமியின் போலியான நாடகம் மற்றும் வார்த்தைகள் புதுவை மாநில மக்களிடம் எடுபடாது. இன்னும் 50 ஆண்டுகள் நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியும் கனவு மட்டுமே காண வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com