மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
Published on

புதுச்சேரி:

காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.

சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com