வியாபாரியின் கார் எரிப்பு

வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்
கோப்பு படம்.   
கோப்பு படம்.   
Published on

புதுச்சேரி:

மேட்டுப்பாளையத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காய்கறி வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை மேட்டுப்பாளையம் சிந்து வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52). இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காய்கறி வியாபாரத்துக்காக ஒரு காரை வாங்கி உபயோகித்து வந்தார். அந்த காரை  வேல்முருகன் தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி விட்டு தூங்க செல்வது வழக்கம் அதுபோல்  வேல்முருகன் காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

நள்ளிரவு 11 மணியளவில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ கார் கண்ணாடியை உடைத்து இருக்ககையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து வேல்முருகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் காரை தீ வைத்த எரித்து சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது வேல்முருகனின் மகன் சிவபிரியன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதற்கு பயந்து வேல்முருகன் தனது மகன் சிவபிரியனை சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். ஆனாலும் ஆத்திரம் தீராத எதிர் தரப்பினர் காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து காருக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com