மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர்.
மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.
மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பாக முதல்வர் மலர்க்கண் மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்த பரிமாற்றம் செய்துகொண்டனர்.

மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர். வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலா ண்மை துறையின் இணைநிலை பேராசிரியர் வைத்தீஸ்வரன் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com