

புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கடலூர் கே-புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி சார்பாக முதல்வர் மலர்க்கண், கே-புட்ஸ் நிறுவன உரிமையாளர் விஸ்வநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர். உணவுத்தொழில் நுட்பத்துறை தலைவர் திருச்செல்வம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் வேலை வாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், துறைத் தலைவர்கள் அருண்மொழி, ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவு பதப்படுத்தலில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து விஸ்வநாதன் சிறப்புரை யாற்றினார். இதற்கான ஏற்பாட்டினை உணவு தொழில்நுட்பதுறையின் பே ராசிரியர் சாந்தலட்சுமி, பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.