மகா காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா

இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது.
பனித்திட்டு கிராமத்தில் சாமிகளின் முத்து பல்லக்கு வீதியுலா நடந்தது.
பனித்திட்டு கிராமத்தில் சாமிகளின் முத்து பல்லக்கு வீதியுலா நடந்தது.
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாகாளியம்மன், விநாயகர், ஊத்துக்காட்டு மாரியம்மன், மகாசக்தி கங்கையம்மன், கங்காதீஸ்வரர், பாலமுருகன் கோவில்கள் இருந்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.

தொடர்ந்து 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதியிலிருந்து 15-ந் தி வரை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8 மணிக்கு சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு 11.30 மணியளவில் காளியம்மன் கடற்கரைக்கு சென்று ஜலம் திரட்டி வந்து பக்தர்கள் செடல் குத்துதல், சாகைவார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் இரவில் முத்துப்பல்லக்கில சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, நிர்வாகிகள் அன்பழகன், மாதவன், ஆறுமுகம், அய்யனாரப்பன், பலராமன், கோவிந்து, கலை வாணன், இளையராஜா, லெனின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com