பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்-டாப் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது.
ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி லேப்-டாப் வழங்கிய காட்சி.
ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி லேப்-டாப் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.

வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல் அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 50 மாணவர்களுக்கு லேப்-டாப், 300 மகளிருக்கு புடவையும் வழங்கினார். விழாவில் ராஜ்பவன் முன்னாள் கவுன்சிலர் குமரன், குணா, ராஜ்பவன் தொகுதி வட்டார தலைவர் கோபிநாத், ராம், மலர்மன்னன், ஸ்ரீகாந்த், ராமதாஸ், ஆனந்த், பாபு, சுந்தர்பால், வினோத், சங்கர், முரளி, சக்திவேல், சுரேஷ், ஒயிட்டவுன் சங்கர், பார்த்திபன்,புகழேந்தி, மகளிர் அணியை சேர்ந்த கலைச்செல்வி, பத்மலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காலை 11 மணி முதல் 1 மணி வரை 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com