கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர்திருவிழா

தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Published on

புதுச்சேரி:

புதுவையை அடுத்த பிள்ளையார்க்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், மே 2-ந் தேதி இரவு கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.

அழகி போட்டியில் பங்கேற்க திருநங்கைகள் புதுவை, தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது மாலை 4.30 மணிக்கு அழுகள நிகழ்ச்சியும், மே 18-ந் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com