துப்பாக்கி முனையில் வாலிபரை கடத்தி நகை-பணம் பறிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு

அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் வாலிபரை கடத்தி நகை-பணம் பறிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்வினோ (வயது36) காங்கிரஸ் பிரமுகர்.

இவருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு சென்னை ஆலந்தூர் வருண்குமார், (35) என்பவர் கார்த்தி வினோவை காரில் கடத்தி சென்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

அங்கு வருண்குமாருடன் வந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு (37) புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் பாபுநடராஜன் (35) கண்ணன் (35) சுரேஷ்(35) மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.

மேலும் அவரை நிர்வா ணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி அரியாங்குப்பத்தில் இருந்து திண்டிவனம் அழைத்து சென்று அங்கு அவர் அணிந்திருந்த 1½ பவுன் மோதிரம், கைச்சங்கி லியை பறித்தும், வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் பணம், கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் பெற்று கொண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்ற தாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கார்த்திக் வினோ திண்டிவனம் போலீசில் முதலில் புகார் தெரிவித்தார். ஆனால் கடத்தல் அரியாங்குப்பத்தில் நடந்ததால் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர்.

அரியாங்குப்பம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் வினோ கடத்தி சென்றதாக கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உள்ளிட் டவற்றை ஆய்வு செய்து விசாரித்தபோது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இதனால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது.

இதையடுத்து கார்த்திக் வினோ புதுச்சேரி கோர்ட்டில் தன்னுடைய புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து வருண்குமார், ஜோஸ்வா ஜெரால்டு, ஆனந்த்பாபு நடராஜன், கண்ணன், சுரேஷ் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 10 பேர் மீது கடத்தல், தாக்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டல் என 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com