காரைக்கால் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது

17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.
காரைக்கால் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com