காரைக்கால்-இலங்கை கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.
காரைக்கால்-இலங்கை கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
Published on

புதுச்சேரி:

காரைக்கால்- இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாகூர் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் காரைக்கால் கடலில் பாதிப்பா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com