பழங்குடியினர் மீதான போலீஸ் அத்துமீறல் ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை

மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழங்குடி இருளர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சமரசம் ஆகாததால் பழிவாங்கும் நோக்கில் பழங்குடி இருளர் 2 பேர் மீது திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் 2 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

எனவே, புதுவை அரசு பழங்குடி இருளர்கள் மீதான போலீஸ் அத்துமீறல்கள் குறித்து ஓய்வுப் பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இல்லையேல், டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com