போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

நாட்டின் அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுவை அரசும் இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.

முதல்கட்டமாக உருளையன்பேட்டை, ஓதியஞ்சாலை போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் பிற போலீஸ்நிலையங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.

போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கேமரா பதிவுகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பார்க்க முடியாது. கேபிள் வழியாக சீனியர் எஸ்.பி. மற்றும் போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கமிட்டி அலுவலகத்தில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com