மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.
ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு தொடங்கிய காட்சி.
ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு தொடங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார். துணை முதல்வர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ஷோபா வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேங்க் ஆப் இந்தியா மேலாளருமான பாக்கிய பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் புகழரசன் மற்றும் பகிமிதா நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com