விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துகூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
பதவியேற்ற நிர்வாகிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.  
பதவியேற்ற நிர்வாகிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.  
Published on

புதுச்சேரி:

திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி ஏற்கும் விழா திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். சங்கத் தலைவர் பாண்டியன் என்ற வெங்கடாஜலபதி துணைத்தலைவராக வடிவேலு இயக்குனர்களாக முருகன் என்ற சுப்பிர மணியன் , உதயசூரியன், சரவணன், அருள்வாணன் ராம கிருஷ்ணன், ரவிக்குமார், சத்தியசீலன் ஆகியோர் பதவி ஏற்றனர்.

பதவி ஏற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com