மது பழக்கத்தை கைவிட முடியாத வேதனையில்காண்டிராக்டர் தூக்கிட்டு தற்கொலை

கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது41). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஜெயபிரகாஷ் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் ெதாழில் செய்து வந்தார்.

 கடந்த 2 ஆண்டுகளாக மது பழக்கத்துக்கு ெஜயபிர காஷ் ஆளானார். இதனால் அவர் தொழிலை சரியாக கவனிக்கவில்லை. இதை யடுத்து குடும்பத்தை நடத்த பிரியா தனது கணவரின் அண்ணன் நடத்தும் ஓட்டலில் கேஷியராக வேலை வருகிறார்.

இதற்கிடையே மதுவை மறப்பதற்காக ஜெயபிரகா சுக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் சமையில் வேலை களை முடித்து விட்டு பிரியா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அங்குள்ள அறையில் ஜெய பிரகாஷ் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார்.

மது பழக்கத்தை மறக்க முடியாத வேதனையில் ஜெயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் முத்தி யால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com