பழ வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- நள்ளிரவில் பரபரப்பு

முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பழ வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- நள்ளிரவில் பரபரப்பு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகர் பகுதியைசேர்ந்த சஞ்சய்குமார் (வயது23). பழ வியாபாரி. இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (21) மற்றும் வெங்கடேசன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் ஆகியோர் சாலையில் கிடந்த ஒரு மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் தூக்கி எறிந்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com