கடையை காலி செய்யக்கூறி ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

ஓட்டல் நடத்தி வரும் லட்சுமியிடம் இடத்தின் உரிமையாளர் சந்திரசேகர் அதிகப்படியான வாடகை கேட்டதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் மணவெளி தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வர் குணசேகரன். இவர் புதுவை பொதுப்பணித் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா என்ற லட்சுமி (வயது 39), புதுவை- விழுப்புரம் சாலையில் தனியார் கம்பெனி அருகே சந்திரசேகர் என்பவ ருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.

கடந்த 2018-ம்ஆண்டு முதல் ஓட்டல் நடத்தி வரும் லட்சுமியிடம் இடத்தின் உரிமையாளர் சந்திரசேகர் அதிகப்படியான வாடகை கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பி ட்ட வாட கையை கொடுக்க வில்லை யென்றால் ஓட்டலை காலி செய்யு ங்கள் என கூறியதாக தெரிகிறது.

சம்ப வ த்தன்று சந்திர சேகர் அவரது மகன் பால சேவகன் இரு வரும் ஓட்டலை காலி செய்யக்கோரி லட்சுமியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com