காரைக்கால் நிரவியில் மோட்டார் சைக்களில் வேகமாக சென்றதை தட்டிகேட்டவருக்கு அடி, உதை

சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர்.இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர்.
காரைக்கால் நிரவியில்  மோட்டார் சைக்களில் வேகமாக சென்றதை தட்டிகேட்டவருக்கு அடி, உதை
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை அந்தோனி யார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர், இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நிரவி காமராஜர் நகரைச்சேர்ந்த சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர். அவர்களை ஸ்டீபன்ராஜ், ஏன் தெருவில் அதிவேகமாக செல்கிறீர்கள். அங்கு நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜை, அங்குள்ளோர், காரைக் கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன்ராஜ் நிரவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com