மியான்மரில் சிக்கிய தமிழர்கள் விரைவில் தாயகம் திரும்புவர்- கவர்னர் தமிழிசை உறுதி

மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம், புதுவையை சேர்ந்த 13 சகோதரர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் தாயகம் திரும்புகின்றனர்.மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 சகோதரர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிய சகோதரர்களை மீட்ட மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவர்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com