இந்த விவகாரத்தில் மனித உரிமையெல்லாம் பார்க்க மாட்டேன்- ஆளுநர் தமிழிசை

சிறுமி விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல்.
இந்த விவகாரத்தில் மனித உரிமையெல்லாம் பார்க்க மாட்டேன்- ஆளுநர் தமிழிசை
Published on

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மனித உரிமையெல்லாம் நான் பார்க்க மாட்டேன்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com