முதலியார்பேட்டையில் கோகுலாஷ்டமி விழா

சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர், கோபியர்கள் வேடங்கள் அணிவித்து விழாவில் பூஜைகள் செய்யப்பட்டது.மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் டாக்டர் கருணாகரன் -ஜெயலட்சுமி குடும்பத்தினர், பாத சிகிச்சை மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.
முதலியார்பேட்டையில் கோகுலாஷ்டமி விழா நடந்த போது எடுத்த படம்.
முதலியார்பேட்டையில் கோகுலாஷ்டமி விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை விடுதலை நகரில் பாத சிகிச்சை மையத்தில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர், கோபியர்கள் வேடங்கள் அணிவித்து விழாவில் பூஜைகள் செய்யப்பட்டது.

பள்ளி, மாணவர்களுக்கு கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து சகோதரத்தை போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் விழாவும் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் டாக்டர் கருணாகரன் -ஜெயலட்சுமி குடும்பத்தினர், பாத சிகிச்சை மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் ஞான. கஸ்பர், ஆசிரியர் முரளிதரன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க அதிகாரிகள் ஆனந்த் நடராஜன், ரவி, சதீஷ்குமார், சம்பந்தம், வெங்கடேசன், சண்முகம், மாநில கூட்டுறவு பிரிவு இணை அமைப்பாளர் ஹரிதாஸ், தொகுதி தலைவர் இன்பசேகர் மற்றும் விடுதலை நகர் நல சங்க நிர்வாகிகளும், பொது மக்களும், மாணவர்களும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com