பெண்களை வீடியோ காலில் நிர்வாணமாக வர மிரட்டிய என்ஜினியர் கைது

சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளி யிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டி ருந்தது.
கைதான என்ஜினீயர்.
கைதான என்ஜினீயர்.
Published on

புதுச்சேரி:

புதுவையை சேர்ந்த 4 பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்திருந்தது.

 அதில் அவர்களின் முகத்தை மார்பிங் செய்து அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல படம் இருந்தது.

அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாண மாக வர வேண்டும். இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது24) என தெரியவந்தது.

இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமணமாகி மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com