காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு சாவு

6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (35), டிரைவர் இவரது மனைவி உஷா

இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

மேலும் அருண்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. கடன் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அருண்குமாரின் மாமியார் லீனாதேவி நேற்று வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு உஷா தனது குழந்தை களுடன் படுக்கை அறையிலும் அருண்குமார் வீட்டு வராண்டாவிலும் தூங்கினர்.

இந்த நிலையில்  குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில்

உஷா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருண்குமார் உஷாவை மீட்டு புதுவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com