விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
காரைக்காலில் விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
காரைக்காலில் விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதை யொட்டி மாவட்டத்தில் திருநகர், பெ ரியபேட் , ஒப்பிலார் மணியர் கோவில் வீதி, கோவில்பத்து, நே ருநகர், கோட்டுச்சேரி, தருமபுரம், மதகடி, ஏழை மாரியம்மன் கோவில் மற்றும் பொதுஇடங்களில் 54 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. காரைக்கால் சக்தி விநாயகர் கமிட்டி மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பு பூஜைக்கு பிறகு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் இந்து முன்னணி பொது செயலர் விஜயன், மாவட்ட தலைவர் கணேஷ், நகர தலைவர் ராஜ்குமார், பா.ஜ.க. மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட தலைவர் சேனாதிபதி, முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சக்தி விநாயகர் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு சென்றது.

அங்கு கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com