சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது

புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை படத்தில் காணலாம்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை படத்தில் காணலாம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வண்ணாங்குளம் பகுதியில் ஒரு கும்பலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.

ஆனால், போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் வண்ணாங்குளம் புது தெருவை சேர்ந்த காண்டீபன் (வயது40) வம்பாபேட் பிரபு(40), மஞ்சக்குப்பம் அனீப்தீன் (37) கடலுார் எஸ்.புதுக்குப்பம் ஆறுமுகம்(39) என்பது தெரியவந்தது. பின்னர் 4பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.14, 380 பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து அவர்களை புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com