சூதாடிய கும்பல் கைது

ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

புதுவை ஜீவானந்த புரம் எம்.ஜி.ஆர். வீதியில் ஒரு வீட்டில் பெரிய அளவில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ரமேஷ் (37) கதிரவன் (52) சிவா (56) சம்பத் ராஜ் (45) மற்றும் அனந்த புரத்தை சேர்ந்த சந்திர சேகரன் (35) வில்லியனூர் உருவையாறு பகுதியை சேர்ந்த பிரபு (31) தட்டாஞ்சாவடியை சேர்ந்த சங்கர் (56) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com