புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் கலைநிகழ்ச்சிகள்

பிரெஞ்சு கல்வி நிறுவனம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.ஏராளமான சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் கலைநிகழ்ச்சிகள்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் பிரெஞ்சு கல்வி நிறுவனம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஸ்டெபன் ஜிரார்ட், கேமில் பியூ மியர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ரோசியோ, பாலின் ப்ரீமியூவின் இசையமைப்புடன் மற்றும் அன்னே ஜொனாதனின் ஆடைகளுடன், பார்வையாளர்களை கவரும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

6 மீட்டர் உயரமுள்ள உலோக கம்பங்களில் அமர்ந்திருக்கும் கலைஞர் மற்றும் இசை கலைஞர்களின் கருவிகளை கொண்டு ரம்மியமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும்படி இருந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com