தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிப்பு

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிப்பு
Published on

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com