வேளாண்துறை முதலாம் ஆண்டு தொடக்க விழா

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக வேளாண் கல்லூரியின் முதல்வர் மொகமது யாசின் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து புல மற்றும் துறை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் 300 பேர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com