சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட காட்சி.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதர்தெரசா நர்சிங் கல்லூரி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதல்வர் மற்றும் பதிவாளர் டாக்டர் கோபால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சுற்றுச்சூழலை பராமரிக்கும் முறைகளையும், அதனை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் பதிவாளர், டீன்கள், அனை த்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்டிடவியல் துறை தலைவர் சுந்தரராமன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com