மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி: 

திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை உள்ளது.

பொது மக்கள் மடுகரை யிலிருந்து திருபுவனையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாகனங்களிலும் நடந்தும் மதகடிப்பட்டு வழியாக சென்று வருகின்றனர்.

2 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் தேவைகளுக்கு நல்லூர் பகுதியில் இருந்து இந்த சாலை வழியாகவே நடந்தும் மற்றும் வாகனங்களிலும் மதகடிப்பட்டு பகுதிக்கு வந்து தங்களது தேவைக்கு கடைவீதியில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் மதகடிப்பட்டு பகுதியில் இருந்து நல்லூர் வரை செல்லும் சாலை இருபுறமும் மரங்கள் வளர்ந்து  நேரங்களில் மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

இதனால் இந்த சாலை முழுவதும் நல்லூர் வரை மின்விளக்குகள் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com