எம்.ஐ.டி.கல்லூரியில் ஈட்டன் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம்

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
எம்.ஐ.டி.கல்லூரியில் ஈட்டன் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம் நடந்த காட்சி.
எம்.ஐ.டி.கல்லூரியில் ஈட்டன் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம் நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் புதுச்சேரி ஈட்டன் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் சந்தோஷ், ஜெய்குமார், ஆகாஷ், மற்றும் முத்துலட்சுமி நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முகாமில், புதுவை மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அணைத்து பொறியியல் கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் மற்றும் 2022-2023 பொறியியல் முடித்த மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com