புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணியை துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய்

சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணியை துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய்
Published on

புதுச்சேரி:

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணியை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்திச்சென்று மிரட்டுவது வழக்கமாகி வருகிறது.

கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.

அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com