கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார்.தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
திருபுவனைபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்த காட்சி.
திருபுவனைபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதியில் உள்ள திருபுவனைபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், இயக்குனர்கள் பதவியேற்பு விழா துலுக்கான மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

புதுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத்துறை நிர்வாக அலுவலர் ஆகியோரின் கடித உத்தரவின் பேரில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டு திருபுவனைப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிகா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பதவி ஏற்று கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மதகடிப்பட்ட கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் துளசிங்க பெருமாள் வரவேற்று பேசினார். மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.

திருபுவனை பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகத்திற்கு புதிதாக நிலம் வாங்கி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், கஸ்தூரிபாய் நகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலக செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com