கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேஷனல் உயர்நிலை பள்ளியில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி.
நேஷனல் உயர்நிலை பள்ளியில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார் தலைமை தாங்கி கிறிஸ்துமஸ் குறித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் எழிலரசி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பள்ளியில், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியைகள் ரோமினா, அருணா கிறிஸ்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தனர். இதில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் தலைமை ஆசிரியர் உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com