நாயுடன் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் சில்மிஷம்-வாலிபர் கைது

நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை வினோபா நகர் பகுதியில் 48 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தினமும் இரவு தான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் அப்பகுதியில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.

அதுபோல் சம்பவத்தன்று இரவு அந்த பெண் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது சக்தி நகரை சேர்ந்த ரமேஷ் 34 என்ற வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

இதனை அந்த பெண் தட்டிக்கேட்ட போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.

பின்னர் இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com