புஸ்சி ஆனந்திடம் நலம் விசாரித்து ஆசி வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி

இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
புஸ்சி ஆனந்திடம் நலம் விசாரித்து அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி  ஆசி வழங்கிய  காட்சி.
புஸ்சி ஆனந்திடம் நலம் விசாரித்து அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆசி வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதய அடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

புஸ்சி ஆனந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து திருநீறு பூசி ஆசி வழங்கினார். இதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com