பண்ருட்டி அருகே மணல் திருட பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல்

தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர்.
பண்ருட்டி அருகே மணல் திருட பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கெடிலம் ஆற்றுப்பகுதி சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகே போலீசார் சென்றனர்.

போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். இருந்தபோதும் அவர்கள் தப்பிவிட்டனர். இதை யடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றில் இருந்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com